×

தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயண திட்டத்தில் தினமும் 45 லட்சம் பெண்கள் பயன்

நெல்லை: தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயணதிட்டத்தில் தினமும் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் மகளிர் இலவச பயணத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தனியார், அரசு பணிகளில் உள்ள பெண்கள் இலவச பயணத்திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பெண் பயணிகளுக்கு போக்குவரத்து செலவு குறைவதுடன், பணத்தை சேமித்தும் வருகின்றனர். இதன் காரணமாக மகளிர் இலவச பயணத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்திற்காக அரசு, போக்குவரத்து கழகத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மகளிர் இலவச பஸ்கள் ‘பிங்க்’ கலரில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை கிராமப்புற பெண்கள் ஸ்டாலின் பஸ் வருகிறது என கூறும் அளவிற்கு பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் சராசரியாக தினமும் சுமார் 45 லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இலவச பஸ்களில் பயணித்து வருகின்றனர். நெல்லை கோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தினமும் திரளான மகளிர் இலவச பஸ்களில் பயணித்து வருகின்றனர். இப்பஸ்களில் கிராம மக்கள் அதிகமானவர்கள் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2024 ஜனவரி வரை நெல்லை மாவட்டத்தில் 8 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 514 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 5 கோடியே 33 லட்சத்து 91 ஆயிரத்து 581 பேரும், தென்காசி மாவட்டத்தில் 4 கோடியே 81 லட்சத்து 11 ஆயிரத்து 639 பேரும் என மொத்தம் 18 கோடியே 92 லட்சத்து 49 ஆயிரத்து 734 பெண்கள் இலவச பஸ் திட்டத்தில் பயணித்துள்ளனர் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தமிழகம் முழுவதும் மகளிர் இலவச பயண திட்டத்தில் தினமும் 45 லட்சம் பெண்கள் பயன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nella ,Tamil Nadu government ,Chief Minister of ,Dimuka Phalawar K. ,Stalin ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்